இஸ்ரேலியப் படைகள் ஜிஎஸ்எப் கப்பலைத் தாக்கின: நீர் பீரங்கிகளால் சுட்டன
இஸ்தான்புல்:
இஸ்ரேலியப் படைகள் ஜிஎஸ்எப் கப்பலைத் தாக்கியதுடன் நீர் பீரங்கிகளால் சுட்டுள்ளன.
காசா நோக்கிச் சென்று கொண்டிருந்த குளோபல் சவுத் ஃப்ளோட்டிலா (ஜிஎஸ்எப்) உதவிக் குழு கப்பலை இஸ்ரேலியப் படைகள் மோதியது.
அந்த கப்பல் தொடரணி மீது நீர் பீரங்கிகளை வீசியது. மேலும் ஆர்வலர்களை முற்றுகையிட்டதாக அனடோலு ஏஜென்சி தெரிவித்துள்ளது.
இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படைகள் எங்கள் கப்பல்களுக்கு எதிராக வன்முறையைப் பயன்படுத்தின.
அவற்றில் ஒன்றை வேண்டுமென்றே மோதியதுடன் பீரங்கிகளை எங்கள் மீது வீசியுள்ளன.
உலகெங்கிலும் உள்ள 50 நாடுகளைச் சேர்ந்த அமைதி ஆர்வலர்கள் கைது செய்யப்பட்டதன் மூலம் நாங்கள் கொடூரமாக மிருகத்தனமாக நடத்தப்படுகிறோம் என்று காசா முற்றுகையை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான சர்வதேசக் குழு எக்ஸ் தள பதிவில் தெரிவித்துள்ளது.
உலகின் தலைநகரங்கள் முழுவதும் அரசாங்கங்கள் குடிமக்களாகச் செயல்பட வேண்டும் என்று எச்சரித்து,
கடற்படை அமைப்பாளர்கள் உடனடி அனைத்துலக தலையீட்டிற்கு அழைப்பு விடுத்தனர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்

