ஜப்பானின் முதல் பெண் பிரதமராக சானே தகாச்சி பதவியேற்க உள்ளார்
ஜப்பானின் முதல் பெண் பிரதமராக சானே தகாச்சி பதவியேற்க உள்ளார்
தோக்கியோ:
ஜப்பான் ஆளுங்கட்சிதேர் தலில் வெற்றி பெற்ற சனே தகாச்சி நாட்டின் முதல் பெண் பிரதமராக தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.
ஜப்பானில் கடந்த 70 ஆண்டுகளா கலிபரல் டெமாக்ரடிக் கட்சியே ஆளுங்கட்சியாக உள்ளது.
ஆனால் சமீப கால மாக இந்த கட்சியின் செல் வாக்கு குறைந்து வருகிறது.
அதன்படி கடந்த ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற மேல்சபை தேர்தலில் ஆளுங்கட்சி தோல்வி அடைந்தது. இதனால் ஆளுங்கட்சி இரு அவையிலும் தனிப் பெரும்பான்மையை இழந்தது.
எனவே நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொடுத்த அழுத்தத்தால் பிரதமர் ஷிகெரு இஷிபா பிரதமர் மற்றும் ஆளுங்கட்சி தலைவர் பதவியில் இருந்து விலகினார்.
அதன் பிறகு புதிய பிரதமரை தேர்வு செய்வதற்கான பணி தீவிரமாக நடைபெற்று வந்தது.
அந்த நாட்டை பொறுத்தவரை ஆளுங்கட்சிதலைவரே பிரதமராக தேர்வு செய்யப்படுகிறார்.
எனவே ஆளும் லிபரல் டெமாக்ரடிக் கட்சியின் தலைவர் பதவி தேர்தல் நடைபெற்றது.
இதில் முன்னாள் நிதி அமைச்சர் சனே தகைச்சி (வயது 64), வேளாண் அமைச்சர் ஷின்ஜிரோ கொய்சுமி உள்பட 5 பேர் போட்டியிட்டனர்.
முதல்கட்ட வாக்குப்பதி வில் சனே தசைச்சி, ஷின்ஜிரோ கொய்சுமி ஆகியோர் வெற்றி பெற்று அடுத்த கட்டத்துக்கு தேர்வாகினர்.
மற்ற 3 பேரும் போட்டியில் இருந்து வெளியேறினர்.
இதனையடுத்து நடை பெற்ற இரண்டாவது சுற்றுத் தேர்தலிலும் சனே தகைச்சி அதிக வாக்குகளை பெற்றார்.
இதனால் ஆளுங்கட்சி தலைவராக அவர் அதிகாரப்பூர்வமாக அறி விக்கப்பட்டார்.
இதன்மூலம் நாட்டின் முதல் பெண் பிரதமராக சனே தகைச்சி பதவியேற்க உள்ளார்.
அவருக்கு கட்சி யின் மூத்த தலைவர்கள், நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
- பார்த்திபன் நாகராஜன்

