images

அமெரிக்காவின்  H-1B விசா US$100,000 கட்டணம் சிங்கப்பூரர்களுக்கு இல்லை

image

அமெரிக்காவின்  H-1B விசா US$100,000 கட்டணம் சிங்கப்பூரர்களுக்கு இல்லை

வாஷிங்டன்: 

அமெரிக்காவின் புதிய H-1B விசா அனுமதிக்கு விதிக்கப்படும் 100,000 டாலர் கட்டணம், சிங்கப்பூரர்களுக்கு வழங்கப்படும் H-1B1 விசா அனுமதிக்குப் பொருந்தாது என்று சிங்கப்பூரில் உள்ள அமெரிக்கத் தூதரகம் தெரிவித்துள்ளது.

இம்மாதம் 19ஆம் தேதி அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பின் (Donald Trump) நிர்வாகம் அந்தப் புதிய கட்டணம் குறித்து அறிவித்தது.

பின்னர் 21ஆம் தேதி அது நடப்புக்கு வந்தது.

H-1B1 விசா அனுமதி நடைமுறையில் எந்த மாற்றமும் இல்லை என்று தூதரகம் Facebookஇல் பதிவிட்டது.

சிங்கப்பூர், சில்லி ஆகியவற்றைச் சேர்ந்தவர்களுக்குப் பிரத்தியேகமாக வழங்கப்படும் விசா அனுமதி H-1B1.

ஒவ்வோர் ஆண்டும் சிங்கப்பூரர்களுக்கு 5,400 விசா பெற வாய்ப்புள்ளது.

ஆர்யன்

பகிர்
+ - reset