பிரிக்ஸ் கூட்டமைப்பில் இணைய பாலஸ்தீனம் கோரிக்கை
பெய்ஜிங்:
பிரிக்ஸ் கூட்டமைப்பில் இணைய பாலஸ்தீனம் விண்ணப்பித்துள்ளது. இந்தத் தகவலை ரஷியாவுக்கான பாலஸ்தீன தூதர் அப்தல் ஹஃபீஸ் நோஃபல் தெரிவித்தார்.
தற்போது பிரேஸில், ரஷியா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா ஆகிய பிரிக்ஸ் கூட்டமைப்பு நாடுகளுடன் எகிப்து, எத்தியோப்பியா, ஈரான், ஐக்கிய அரபு அமீரகம், இந்தோனேசியா ஆகியவையும் இடம்பெற்றுள்ளன.
இந்தக் கூட்டமைப்பில் இணைய பாலஸ்தீனம் விண்ணப்பித்துள்ளது.
கனடா, ஆஸ்திரேலியா, போர்சுகல், பிரிட்டன் ஆகிய நாடுகள், பாலஸ்தீனத்தை தனிநாடாக அண்மையில் அங்கீகரித்த நிலையில், இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பாலஸ்தீனத்தின் இந்த முயற்சியை சீன வரவேற்றுள்ளது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்

