images

வெளிநாட்டு மருந்துகளுக்கு 100 விழுக்காடு வரி: டிரம்ப் உத்தரவு

image

வெளிநாட்டு மருந்துகளுக்கு 100 விழுக்காடு வரி: டிரம்ப் உத்தரவு

வாஷிங்டன்: 

வெளிநாட்டு மருந்துகளுக்கு 100 விழுக்காடு வரி விதிக்கப்படும் என்று அதிபர் டொனால்ட் டிரம்ப்  அறிவித்தார்.

இதுதொடர்பாக ட்ரூத் சமூக வலைதளத்தில் டிரம்ப் வெளியிட்ட பதிவில், மருந்துகளுக்கு அக்.1 முதல் 100 சதவீதம் வரி விதிக்கப்படவுள்ளது. பிராண்டட் மற்றும் காப்புரிமை பெற்ற மருந்து பொருள்களுக்கு இந்த வரி வதிப்பு பொருந்தும்.

அமெரிக்காவில் மருந்துகள் தயாரிப்பதற்கான ஆலையைத் தொடங்கும் நிறுவனங்களுக்கு இந்த வரி விதிப்பு பொருந்தாது.

வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் அனைத்து கனரக வாகனங்களுக்கும் 25 சதவீதம் வரி விதிக்கப்படுகிறது எனக் குறிப்பிட்டுள்ளார்.

- ஆர்யன்

பகிர்
+ - reset