சிங்கப்பூர் அல் இஸ்டிகமா பள்ளிவாசலில் பன்றி இறைச்சி?: உள்துறை அமைச்சர் சண்முகம் கண்டனம்
சிங்கப்பூர்:
சிராங்கூன் நார்த்தில் (Serangoon North) உள்ள அல் இஸ்டிகமா (Al-Istiqamah) பள்ளிவாசலில் சந்தேகத்துக்குரிய பொட்டலம் நேற்று கண்டுபிடிக்கப்பட்டிருந்தது.
அது ஒரு தகாத செயல்; வழிபாட்டுத் தலங்களைக் குறிவைப்பதைப் பொறுத்துக்கொள்ள முடியாது என்று உள்துறை அமைச்சர் கா சண்முகம் கண்டித்துள்ளார்.
இத்தகைய செயல்களைப் புரிவோர் நெருப்புடன் விளையாடுகிறார்கள் என அவர் சொன்னார்.
பள்ளிவாசலுக்குச் சந்தேகத்துக்குரிய பொட்டலம் அனுப்பப்பட்டது தனிப்பட்ட சம்பவம் அல்ல என்றும் அவர் சொன்னார்.
இதுபோன்ற மேலும் சில சம்பவங்களைக் காவல்துறை விசாரித்து வருகிறது என்றார் சண்முகம்.
அல் இஸ்டிகமா பள்ளிவாசலுக்கு வருகை தந்த அமைச்சர் செய்தியாளர்களிடம் பேசினார்.
அந்தப் பள்ளிவாசலுக்கு அனுப்பப்பட்ட பொட்டலத்தில் மாமிசம் இருந்ததாகவும் அது சோதனைக்கு அனுப்பப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
அது பெரும்பாலும் பன்றியாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
சிங்கப்பூரில் இத்தகைய சம்பவங்கள் நடப்பதை ஒரு போதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றார் அவர்.
இதுபோன்ற சம்பவம் இங்கு நடப்பது முதல் முறையல்ல.
"சிங்கப்பூரில் எல்லோரும் அவர்களுடைய மதத்தைப் பேணிக் காக்க முடியும். மதம் சார்ந்த முறையில் அவர்கள் வழிபட முடியும். அதற்குப் பாதுகாப்பு எப்போதும் அளிக்கப்படும். இதுபோன்ற தகாத செயல்கள் தண்டிக்கப்படும்," என்றார் சண்முகம்.
- ரோசித் அலி
தொடர்புடைய செய்திகள்

