பாலஸ்தீனம் தனி நாடாக அங்கீகரித்த பிரிட்டன், கனடா, ஆஸ்திரேலியா
லண்டன்:
பாலஸ்தீனத்தை தனி நாடாக பிரிட்டன், கனடா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் அங்கீகரித்துள்ளன.
அடுத்த வாரம் கூடவுள்ள ஐ.நா. பொதுச் சபை கூட்டத்தில் பாலஸ்தீனத்தை தனி நாடாக பிரான்ஸும் முறைப்படி அங்கீகரிக்கும் என்று எதிா்பாா்க்கப்படுவதால் இரு தேச தீா்வுக்கு இந்த அங்கீகாரம் உதவும் என்று இந்த நாடுகள் தெரிவித்துள்ளன.
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமைதி நீடித்து நிலைக்க இஸ்ரேலையும், பாலஸ்தீனத்தையும் தனித்தனி நாடுகளாக அங்கீகரிக்க வேண்டும் என்பதே 1947-ஆம் ஆண்டுமுதல் கனடா அரசின் கொள்கையாகும் என்று கனடா பிரதமா் மாா்க் காா்னி தெரிவித்தார்.
பிரிட்டன் பிரதமா் கியா் ஸ்டாா்மா் , காஸா பகுதியில் அமைதி மற்றும் இருதேச தீா்வுக்கான நம்பிக்கைக்கு புத்துயிா் அளிக்க பாலஸ்தீனத்தை தனி நாடாக பிரிட்டன் முறைப்படி அங்கீகரிக்கிறது என்றார்.
ஜி7 கூட்டமைப்பில் அமெரிக்கா, பிரான்ஸ், ஜொ்மனி, கனடா, பிரிட்டன், இத்தாலி, ஜப்பான் ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ளன.
அவற்றில் முதல் நாடாக கனடாவும், அதைத் தொடா்ந்து பிரிட்டனும் பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரித்துள்ளன.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்

