இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: மின்சாரம், தொலைத்தொடர்புச் சேவைகள் துண்டிக்கப்பட்டன
ஜாகர்த்தா:
இந்தோனேசியாவின் மத்திய பாப்புவா (Papua) மாநிலத்தில் இன்று 6.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
பொருட்சேதம், உயிருடற்சேதம் குறித்து உடனடித் தகவல் இல்லை.
நிலநடுக்கத்தினால் பல பொதுச் சொத்துகள் பாதிப்படைந்துள்ளதாக அந்நாட்டின் பேரிடர் மீட்புக் குழுவின் பேச்சாளர் ஒருவர் கூறினார்.
"விமான நிலையத்தில் கண்ணாடி உடைந்தது. அலுவலகத்தின் மேற்கூரை சரிந்து விழுந்தது. பாலம் சேதமடைந்தது, மின்சாரம், தொலைத்தொடர்புச் சேவைகள் துண்டிக்கப்பட்டன," என்று பேச்சாளர் கூறினார்.
பசிபிக் "நெருப்பு வளையத்தில்" (Ring of Fire) இந்தோனேசியா அமைந்துள்ளதால் அங்கு அடிக்கடி நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றன.
ஆதாரம்: AFP
தொடர்புடைய செய்திகள்

