images

ஜப்பான் கோபே நகரில் எம்பொக்ஸ் தொற்றின் முதல் பாதிப்பு சம்பவம் உறுதி செய்யப்பட்டுள்ளது

image

ஜப்பான் கோபே நகரில் எம்பொக்ஸ் தொற்றின் முதல் பாதிப்பு சம்பவம் உறுதி செய்யப்பட்டுள்ளது

ஜப்பான்:

ஜப்பான் கோபே நகரில் mpox Clade 1B (எம்பொக்ஸ்) தொற்றின் முதல் பாதிப்பு சம்பவம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஜப்பான் சுகாதார அமைச்சு ஓர் அறிக்கையின் வாயிலாக இதனை தெரிவித்தது.

ஆப்பிரிக்காவுக்கு பயணம் செய்த 20 வயதுடைய ஒரு பெண்ணுக்கு எம்பொக்ஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

மரபணு சோதனைகளில் அவர் Clade 1b வகை வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் காட்டப்பட்டுள்ளது.

இது ஜப்பானில் கண்டறியப்பட்ட முதல் வகை தொற்றாகும்.

இந்த வகை தொற்று மத்திய ஆப்பிரிக்காவின் பல பகுதிகளில் பரவுவதாக அறியப்படுகிறது.

கடந்த செப்டம்பர் 12 ஆம் தேதி கோபியில் உள்ள ஒரு மருத்துவ மையத்தில் சிகிச்சை பெற்றார்.

இதற்கு முன்பு அந்நோயாளிக்கு காய்ச்சல், தோல் சொறி ஏற்பட்டது. அவரது உடல்நிலை தற்போது  சீராக உள்ளது.

ஜப்பானில் இதுவரை சமூக பரவல் இருப்பதற்கான எந்த அறிகுறியும் இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

- பார்த்திபன் நாகராஜன்

பகிர்
+ - reset