விசா விண்ணப்பித்தவர்களிடம் பாலியல் சேவை பெற்ற ICA அதிகாரிக்கு 22 மாதச் சிறை
சிங்கப்பூர்:
குடிநுழைவு, சோதனை சாவடிகள் ஆணைய அதிகாரி 55 வயது கண்ணன் மோரிஸுக்கு 22 மாதச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது.
குறுகிய கால விசா அனுமதிக்கு விண்ணப்பித்த சிலருக்கு உதவுவதாகக் கூறி அவர்களிடம் பாலியல் சேவைகள் பெற்றதாக அவர்மீது குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.
மூன்று குற்றச்சாட்டுகளை அவர் ஒப்புக்கொண்டார்.
1996ஆம் ஆண்டு குடிநுழைவு, சோதனைச் சாவடிகள் ஆணையத்தில் சேர்ந்த கண்ணன் பிறகு பதவி உயர்வு பெற்று விசா பிரிவின் தலைவராகப் பொறுப்பு வகித்தார்.
அரசாங்கத் தரப்பு அதிகபட்சம் 36 மாதம்வரை சிறைத்தண்டனை விதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தது.
அவரின் தண்டனைக் காலம் செப்டம்பர் 18ஆம் தேதி தொடங்கும்.
ஆதாரம்: மீடியா கோர்ப்
தொடர்புடைய செய்திகள்

