பிரான்ஸ் புதிய பிரதமர் செபாஸ்டியன் லெகோர்னு
பாரீஸ்:
பிரான்ஸின் புதிய பிரதமராக பாதுகாப்புத் துறை அமைச்சர் செபாஸ்டின் லெகோர்னு அதிபர் இமானுவல் மேக்ரான் நியமித்தார்.
கடந்த 14 மாதங்களில் பிரான்ஸில் 4வது பிரதமராக செபாஸ்டின் லெகோர்னு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
நம்பிக்கை வாக்கெடுப்பில் பிரதமராக இருந்த பிரான்சுவா பேரூ தோல்வியடைந்தார். இதையடுத்து, பிரான்ஸின் இளம் பாதுகாப்பு அமைச்சரான செபாஸ்டின் லெகோர்னுவை இமானுவல் மேக்ரான் நியமித்தார்.
கேப்ரியல் அட்டல் கடந்த ஜூலை மாதம் பிரதமர் பதவியை ராஜிநாமா செய்தார். பிறகு மைக்கேல் பார்னியர் பிரதமராக நியமிக்கப்பட்டார். அதன்பிறகு பிரான்சுவா பேரூவை பிரதமராக இமானுவல் மேக்ரான் நியமித்தார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்

