ஹாங்காங்கில் சூறாவளி: பள்ளிகளும் வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டன
ஹாங்காங்:
ஹாங்காங்கில் Tapah சூறாவளி நெருங்குவதால் அங்குள்ள பள்ளிகளும் வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டிருக்கின்றன.
தொடரும் கனத்த மழையால் ஹாங்காங் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கிறது.
பல விமானச் சேவைகள் ரத்து செய்யப்பட்டிருக்கின்றன
நிலச்சரிவோ பெரிய அளவிலான வெள்ளமோ ஏற்பட்டதாகத் தகவல் இல்லை.
படகுகள், பேருந்துகள், tram வண்டிகள் உள்ளிட்ட போக்குவரத்துச் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.
பெருவிரைவு ரயில் முறை கூடுதல் இடைவெளிகளில் செயல்படுகிறது.
Tapah சூறாவளிக்கான எச்சரிக்கை உள்ளூர் நேரப்படி இன்று காலை 11 மணி வரை நடப்பில் இருக்கும் என்று ஹாங்காங் அதிகாரிகள் தெரிவித்தனர்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்

