அமெரிக்கா - இந்தியா உறவு பாதிப்புக்கு தீர்வு காண ஆலோசகர்
புது டெல்லி:
அமெரிக்கா - இந்தியா இடையிலான ஏற்பட்டுள்ள வர்த்தக உறவு பாதிப்புக்கு தீர்வு காண இந்திய அரசால் ஆலோசகர் ஜேசன் மில்லர் நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பை சந்தித்து பேசினார். இந்தியாவுக்கு விதிக்கப்பட்ட 50 சதவீத வரியால் இரு நாட்டுகளுக்கும் இடையே வர்த்தகப்போர் ஏற்பட்டுள்ளது.
இந்த சூழலில், ஜம்மு - காஷ்மீரின் பஹல்காம் தாக்குதல், வர்த்தகத்தில் இந்தியாவின் நிலைப்பாடுகள் குறித்து அமெரிக்க அதிபர் டிரம்புக்கு எடுத்துரைப்பதற்காக, அமெரிக்காவைச் சேர்ந்த ஜேசன் மில்லர், இந்தியாவுக்கான அரசியல் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் டிம்ப்புடன் முதல் சந்திப்பை நடத்தியுள்ளார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்

