இந்தோனேசியாவின் இலவச உணவு திட்டம் 400 மாணவர்கள் நச்சுணவால் பாதிப்பு
ஜாகர்த்தா:
இந்தோனேசியாவின் இலவச உணவுத் திட்டத்தில் சாப்பிட்ட கிட்டத்தட்ட 400 மாணவர்கள் நச்சுணவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஜனவரியில் தொடங்கப்பட்ட இந்தோனேசியாவின் இலவச உணவுத் திட்டம், அதிபர் பிரபோவோ சுபியாண்டோவின் முதன்மைத் திட்டத்தின் ஒரு பகுதியாகும்.
இது இதுவரை 15 மில்லியனுக்கும் அதிகமான பெறுநர்களுக்கு விரிவடைந்துள்ளது.
இந்நிலையில் இந்தோனேசியாவின் பெங்குலு மாநிலத்தில் வியாழக்கிழமை அரசு திட்டத்தின் கீழ் இலவச உணவு வழங்கப்பட்டது.
இந்த உணவை சாப்பிட்ட பாலர் பள்ளி முதல் தொடக்கப்பள்ளி வரை குறைந்தது 400 மாணவர்கள் நச்சுணவால் பாதிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது.
இதனால் விசாரணை நடத்த அனுமதிக்கும் வகையில் சம்பந்தப்பட்ட சமையலறையின் செயல்பாடுகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படும் என்று பெங்குலு துணை ஆளுநர் மியான் தெரிவித்தார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்

