சிங்கப்பூரில் தீபாவளிக்கு முதல் நாள் - ரயில், பேருந்துச் சேவை நேரம் நீட்டிக்கப்படுகிறது: SMRT அறிவிப்பு
சிங்கப்பூர்:
சிங்கப்பூரில் தீபாவளிக்கு முதல் நாள் (19 அக்டோபர்) குறிப்பிட்ட ரயில், பேருந்துகள் கூடுதல் நேரம் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
வடக்கு-தெற்குப் பாதை, கிழக்கு-மேற்குப் பாதை, வட்டப்பாதை, தாம்சன்-ஈஸ்ட் கோஸ்ட் பாதை ஆகியவற்றில் ரயில் சேவைகள் நீட்டிக்கப்படும் என்று SMRT நிறுவனம் கூறியுள்ளது.
சுவா சூ காங் (Choa Chu Kang), உட்லண்ட்ஸ் (Woodlands), புக்கிட் பாஞ்சாங் (Bukit Panjang), பூன் லே (Boon Lay), சுவா சூ காங் நிலையத்திற்கு எதிரே இருக்கும் நிறுத்துமிடம் ஆகியவற்றில் சில பேருந்துகள் நள்ளிரவுக்குப் பின்னர் புறப்படும்.
மேல் விவரங்களுக்கு, SMRTஇன் Facebook பக்கத்தை நாடலாம்.
- ரோஷித் அலி
தொடர்புடைய செய்திகள்

