ரியாத் சீசன் 2025 மெகா அணிவகுப்புடன் அக்டோபர் 10இல் தொடங்குகிறது
துபாய்:
சவுதி தலைநகர் ரியாத் இதுவரை இல்லாத அளவுக்கு மிகப் பெரிய பொழுதுபோக்கு அம்சங்களுடன் அதன் பருவத்தைத் தொடங்க உள்ளது,
இது உலகளாவிய சுற்றுப் பயணிகளை கலாச்சார ரீதியாக எடுக்கப்படும் ஒரு முயற்சி என்று சவுதி அரசு தெரிவித்துள்ளது.
ஞாயிற்றுக்கிழமை ஒரு செய்தியாளர் கூட்டத்தில், பொது பொழுதுபோக்கு ஆணையத்தின் தலைவர் துர்கி அல் அல்ஷெய்க் இது குறித்து விவரித்தார்.
ரியாத் சீசன் 2025 க்கான முழு நிகழ்ச்சி நிரலையும் அவர் அப்போது வெளியிட்டார். இந்த நிகழ்ச்சி அக்டோபர் 10 வெள்ளிக்கிழமை பவுல்வர்டு நகரத்திற்கு அருகில் ஒரு பெரிய அணிவகுப்புடன் துவங்கும் என்றார்.
இப்போது மீண்டும் ஆறாவது ஆண்டாக இந்த விழா நடத்தப்படுகிறது. சவுதி அரேபியாவின் வேகமாக வளர்ந்து வரும் பொழுதுபோக்கு துறையில் ரியாத்தை சர்வதேச ஓய்வுக்குரிய இடமாகவும் கலாச்சாரத்திற்கான மையமாகவும் நிலைநிறுத்த தாங்கள் முயற்சிப்பதாக அவர் கூறினார்.
- ஃபிதா

