images

சின்ன சின்ன முயற்சிகள்தான் அனுபவத்தைப்  பெருக்கும் - டத்தோ ஸ்ரீ முஹம்மது இக்பால் 

image

சின்ன சின்ன முயற்சிகள்தான் அனுபவத்தைப்  பெருக்கும் - டத்தோ ஸ்ரீ முஹம்மது இக்பால் 

'சிறுதுளி பெரு வெள்ளம்' என்று கூறுவர். சின்னச் சின்னதாய் செய்யும் செயல்கள் பெரிதாக மருவும் என்பதே இதன் தத்துவம். 

பிரம்மிக்க வைக்கும் பிரமிடுகளும்  சிறிய கற்களினால் படிப்படியாக உயர்த்திக் கட்டப்பட்டவைதான். 

கனவுகள் பெரியதாக இருந்தாலும், அதன் உண்மைச் செயல்பாடுகள் படிப்படியான முயற்சிகளிலேயே பெரிதாக உருவாகின்றன. எனவே, முயற்சிகளைச் சின்னதகாவே ஆரம்பித்து, பெரிதாக உருவாக்க தளம் அமைக்க வேண்டும்.

ஒன்று   :    

சேமிப்புப்  பழக்கம் இளமையிலேயே உருவாக்கப்பட வேண்டும். சில்லறையை சேமிக்கப் பழக்கப்படுத்தப்பட்ட பிள்ளைகள்  பிற்காலத்தில் நிதி ஆளுமை வல்லவர்களாக ஆகக்  கூடும். இளமைப் பயிற்சிப்  பக்குவம் வாழ்க்கைத் தேடலில் ஒரு பக்குவத்தை உருவாக்கும்.

இரண்டு    :  

கை  வலி, கால் வலி, கழுத்து வலி என்று உடல் உபாதைகள் வரும்போது  எலும்பு, தசை , நார் பயிற்சிகளுக்கு பரிந்துரைகள் தரப்படும். ஓர்  ஆசனத்தை அப்பியாசத்தை ஐம்பது நூறு என்று செய்ய வலியுறுத்தப்படும்போது அது மலைப்பாகத் தோன்றும். ஐந்து, பத்து என்று சிறியதாக ஆரம்பித்து, படிப்படியாக ஐம்பது நூறாக தாவ முடியும்.

மூன்று  :  

சிறுதொழில் வர்த்தகம்தான் நம் நாட்டில் மட்டுமல்ல உலகெங்கும் வியாபித்திருக்கிறது. ஏறத்தாழ 90 சதவிகித வியாபாரங்கள் சிறுதொழில் வர்த்தகர்களால்தான் செயல்பட்டு வருகின்றன. அதாவது, சிறிய முயற்சியே சீரிய முயற்சியாக  மருவுகிறது என்பது இதன் கருத்தாகும். சிறுதொழில் அனுபவமே சிறந்த அனுபவம்.

3 Money Habits to Build Your Wealth - Go Trading Asia

நான்கு   :

பளு தூக்குபவர்கள் கூட சிறு சிறு எடையை முதலில்  தூக்கிப் பயிற்சியில் ஈடுபடுவர். பின்னர் பழக்கத்தின் அடிப்படையிலும், பயிற்சிகளின் அனுபவத்திலும், பெரிய எடையை ஒரே மூச்சில் தூக்குவார்கள்.

ஆசை பெரிதாக இருக்கலாம். அந்த அளவிற்கு செயல்பட அசாதாரண மனிதர்களாலேயே முடியும். சாமானியர்களை, சராசரி மனிதர்களும் சின்னச் சின்ன முயற்சிகளில்தான் முக்கி எழ வேண்டும். அப்போதுதான் பெரிய முயற்சியும் திருவினையாகும்.
 

பகிர்
+ - reset