images

காராக் நெடுஞ்சாலையில் லோரி தீப்பிடித்து எரிந்தது: ஓட்டுநர் கருகி மாண்டார்

image

காராக் நெடுஞ்சாலையில் லோரி தீப்பிடித்து எரிந்தது: ஓட்டுநர் கருகி மாண்டார்

கோம்பாக்:

காராக் நெடுஞ்சாலையில் லோரி தீப்பிடித்து எரிந்த சம்பவத்தில் ஓட்டுநர் கருகி மாண்டார்.

சிலாங்கூர் தீயணைப்பு, மீட்புத் துறையின் செயல்பாட்டுப் பிரிவின் உதவி இயக்குநர் அஹ்மத் முக்லிஸ் முக்தார் இதனை கூறினார்.

இன்று காலை கெந்திங் செம்பாவிலிருந்து கோலாலம்பூர் செல்லும் காராக் நெடுஞ்சாலையின் கிலோமீட்டர் 28 இல் இந்த விபத்து நடந்தது.

இந்த விபத்தில் லோரி ஓட்டுநர் தான் ஓட்டிச் சென்ற வாகனம் தீப்பிடித்து எரிந்ததில் அவர் உயிரிழந்தார்.

இறந்தவர் 28 வயதான முஹம்மது இஸ்ஸாத் கமாருதீன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் குறித்து அதிகாலை 4.21 மணிக்கு தனது துறைக்கு அவசர அழைப்பு வந்ததது.

தீயணைப்பு வண்டியுடன் ஆறு அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

காலை 5.07 மணிக்கு வந்தபோது, ​​ஒரு லோரி சுமார் 60% எரிந்து விட்டது.

ஓட்டுநர் எரிந்த நிலையில் காணப்பட்டார். மேலும் அவர் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதாக சுகாதார அமைச்சக மருத்துவ அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தினார் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

பகிர்
+ - reset