images

பெர்மிம் பேரவையின் நான் எப்போது மாறுவேன்? சிறப்பு நிகழ்ச்சி: மாற்றத்தின் தொடக்கம் இந்திய முஸ்லிம் மகளிர் மனங்களில்

image

பெர்மிம் பேரவையின் நான் எப்போது மாறுவேன்? சிறப்பு நிகழ்ச்சி: மாற்றத்தின் தொடக்கம் இந்திய முஸ்லிம் மகளிர் மனங்களில்

கோலாலம்பூர்:

மலேசிய இந்திய முஸ்லிம் தேசியப் பேரவை சார்பில் 'நான் எப்போது மாறுவேன்?' எனும் சிறப்பு நிகழ்ச்சி டாங் வாங்கி சைட் பிஸ்ட்ரோவில் சிறப்பாக நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சி இந்திய முஸ்லிம் மகளிரின் மன மாற்றம், தலைமைத்துவ வளர்ச்சி, சமுதாய பங்களிப்பு ஆகியவற்றை ஊக்குவிக்கும் நோக்கில் இஸ்லாமியப் பிரிவின் ஏற்பாட்டில் நடைபெற்றது.

பெர்மிமின் துணைத் தலைவர், இஸ்லாமிய சமய விவகாரப்பிரிவு தலைவரான அன்வார் அவர்கள் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். 

இந்த நிகழ்ச்சியின் ஏற்பாட்டுக்குழு தலைவி சகோதரி ரஃபிடா  வரவேற்பு உரையுடன் நிகழ்ச்சி துவங்கியது.

முதல் பேச்சாளராக டத்தின்ஸ்ரீ அமீரா, பொறாமை அதன் பெண்களின் வளர்ச்சியில் ஏற்படுத்தும் தாக்கம் என்ற தலைப்பில் ஆழமான உரை நிகழ்த்தினார். 

அவர், பெண்களின் உள்மன அமைதிக்கும் தனி முன்னேற்றத்துக்கும் பொறாமையை கட்டுப்படுத்துதல் முக்கியம் என வலியுறுத்தினார்.

இரண்டாம் பேச்சாளராக வழக்கறிஞர்  ஃபரிதா தலைமைத்துவம், பொறுமை, ஒருவருக்கொருவர் ஆதரவு என்ற தலைப்பில் பேசியபோது, பெண்கள் சமூக மாற்றத்தின் முன்னணியில் நின்று வழிகாட்டும் சக்தி கொண்டவர்கள் என கூறினார்.

நிகழ்ச்சியின் நிறைவு உரையை பெர்மிமின் சமூக பொருளாதார மேம்பாட்டு பிரிவு தலைவர்  கலிருஸ்ஸமான் ஆற்றினார்.

மாற்றம் நாளைக்கு காத்திருக்காது; அது இப்போதே, இங்கிருந்தே ஆரம்பிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

அல்லாஹ் எந்த சமுதாயத்தவரையும் மாற்றமாட்டான், அவர்கள் தங்களைத் தாமே மாற்றிக் கொள்ளாவிட்டால்.” (ஸூரா அர்-ரஅத், 11)

அவர் இந்திய முஸ்லிம் சமுதாயத்தின் கல்வி, பொருளாதாரம், மார்க்க பணிகளில் பெண்களின் பங்களிப்பை பாராட்டி, மாற்றத்தின் தொடக்கம் மனத்திலேயே தொடங்க வேண்டும் என நினைவூட்டினார்.

அவரது கவிதை வரிகள் பங்கேற்பாளர்களை பெரிதும் நெகிழ வைத்தன.

மாற்றம் என்னில் வேண்டும்
மாறும் உலகில் மின்னிட வேண்டும்
அறிவை கற்றிட வேண்டும்
அகங்காரம் இல்லா வாழ்வு வேண்டும்.
பெர்மிம் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக, இந்திய முஸ்லிம் சமுதாயத்தின்  இஸ்லாமிய ஒற்றுமை, கல்வி முன்னேற்றம், பொருளாதார வளர்ச்சி, தொழில் முனைவு மேம்பாடு, கலாசாரப் பாதுகாப்பு ஆகிய துறைகளில் சோர்வின்றி  செயல்பட்டு வருகிறது.

கலிருஸ்ஸமான்  இந்த நிகழ்வில், சமுதாயத்தின் பி40 பிரிவைச் சேர்ந்த குடும்பங்களுக்கான கல்வி, தொழில் தொடக்க உதவி திட்டம் பற்றியும் பகிர்ந்து, மாதம் 100 ரிங்கிட் பங்களிப்பின் மூலம் சமுதாய உயர்வில் பங்கேற்குமாறு அனைவரையும் அழைத்தார்.

நிகழ்ச்சி முழுவதும் மாற்றம் உன்னிடமே தொடங்குகிறது என்ற செய்தி வலியுறுத்தப்பட்டது.

பங்கேற்ற பெண்கள் தங்கள் வாழ்வில் நேர்மறை மாற்றம் ஏற்படுத்த உறுதியெடுத்தனர்.

நிகழ்வில் பெர்மிமின் தலைமைத்துவம், மகளிர் பிரிவு உறுப்பினர்கள், பல்வேறு துறைகளில் ஈடுபட்ட இந்திய முஸ்லிம் பெண்கள் கலந்துகொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.

- பார்த்திபன் நாகராஜன்

பகிர்
+ - reset