கோப்பெங் தமிழ்ப்பள்ளி வகுப்பறைகளில் கறையான்கள் அரித்து சேதம் அடைந்த கட்டடங்களை சீரமைக்கும் பணி அடுத்தாண்டு தொடங்கும்: தான்
கோப்பெங் தமிழ்ப்பள்ளி வகுப்பறைகளில் கறையான்கள் அரித்து சேதம் அடைந்த கட்டடங்களை சீரமைக்கும் பணி அடுத்தாண்டு தொடங்கும்: தான்
கோப்பெங்:
கோப்பெங் தமிழ்ப்பள்ளி வகுப்பறைகளில் கறையான்கள் அரித்து சேதம் அடைந்த கட்டடங்களை சீரமைக்கும் பணி அடுத்தாண்டு தொடங்கும்.
கோப்பெங் நாடாளுமன்ற உறுப்பினர் தான் கார் ஹிங் இதனை கூறினார்.
கோப்பெங் தொகுதியில் உள்ள சில அரசு சாரா மகளிர் இயக்கங்கள் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்விற்கு கோப்பெங் நாடாளுமன்ற உறுப்பினர் தான் கார் ஹிங் சிறப்பு வருகை புரிந்தார்.
அவருடன் பேரா மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் சண்ரா இங் , சிம்பாங் பூலாய் சட்டமன்ற உறுப்பினர். ஓங் சாய் இட் ஆகிய இருவரும் சேலை அணிந்து வந்ததுடன் குத்து விளக்கை ஏற்றி நிகழ்வை தொடக்கி வைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதில் சிறார்களுக்கு வர்ணம் தீட்டும் போட்டியுடன், ஆடையலங்காரப் போட்டியும் நடத்தப்பட்டது.
மேலும் இந்த நிகழ்வில் முறுக்கு, நெய் உருண்டை, பொறி உருண்டை உட்பட பல பலகாரங்கள் இந்தியர்களின் பாரம்பரிய பலகாரங்கள் தயார் செய்து இதில் கலந்துக்கொண்ட பிற சமுகத்தின் பார்வைக்கும் சுவைக்கவும் தயார் செய்யப்பட்டது.
இந்த நிகழ்வில் பேசிய தான் கார் ஹிங் பேரா கோப்பெங் தமிழ்ப்பள்ளியில் வகுப்பறைகளில் கரையான்களால் அரித்து சேதம் அடைந்து கட்டடங்களை சீரமைக்கும் பணி அடுத்தாண்டு தொடங்கும் என்ற தகவலையும் தெரிவித்தார்
இந்த விவகாரத்திற்கு தீர்வுக்கான உரிய நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தெரிவித்தார்
சேதம் அடைந்துள்ள வகுப்பறைகளை சீர் செய்ய நிதி ஒதுக்கீட்டை அரசாங்கத்திடம் கோரிக்கைகளை முன் வைத்துள்ளதாக கோப்பெங் லாவான் கூடாவில் உள்ள சமுக மண்டபத்தில் நடைபெற்ற கோப்பெங் மகளிருடன் தீப ஒளி பயணம் 2025 என்ற நிகழ்வில் கலந்துக்கொண்டப் பின்னர் இதனை தெரிவித்தார்
கடந்ந 60 ஆண்டு கால பழமை வாய்ந்த கோப்பெங்கில் மாநகரில் உள்ள இப்பள்ளிக் கூடத்தில் 120 மாணவர்கள் கல்வி பயின்று வருகிறார்கள், அதில் 16 ஆசிரியர்கள பணிபுரிந்து வருகிறார்கள்.
இந்த பள்ளிக் கூட சூழ் நிலை மாணவர்களுக்கு அச்சுறுத்தும் வகையில் உள்ளதை கல்வி இலாகா உணர்ந்து பழுதுகளை சீர் செய்து வந்தாலும் அதற்கு நிரந்தர தீர்வுக்கான உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.
இந்த நிகழ்வில் ஏற்பாட்டுக் குழு சார்பில் பேசிய கோமதி சண்முகம் , இந்த நிகழ்வு இந்த தொகுதியில் அரசு சாரா மகளிர் அமைப்புகள் ஒன்று சேர்ந்து ஏற்பாடு செய்யப்பட்டது.
- பார்த்திபன் நாகராஜன்

