images

சபா சட்டமன்றம் கலைப்பு குறித்த ஊகங்கள்: ஹாஜிஜி இன்று காலை ஆளுநரை சந்தித்தார்

image

சபா சட்டமன்றம் கலைப்பு குறித்த ஊகங்கள்: ஹாஜிஜி இன்று காலை ஆளுநரை சந்தித்தார்

கோத்தா கினபாலு:

சபா மாநில முதலமைச்சர் டத்தோஸ்ரீ ஹாஜிஜி நூர் இன்று காலை ஆளுநர் துன் மூசா அமானை சந்தித்தார்.

இதனால்  மாநில சட்டமன்றம் கலைக்கப்படுவது குறித்த ஊகங்கள் தீவிரமடைந்து வருகின்றன.

ஹாஜிஜி மூசாவுடனான சந்திப்பை முடித்த பிறகு மெனாரா கினாபாலுவில் ஒரு சிறப்பு செய்தியாளர் சந்திப்பு நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சபா மாநில சட்டமன்றத்தின் காலக் கெடு வரும்  நவம்பர் 11 ஆம் தேதி தானாகவே கலைக்கப்படும், இது மாநில அரசியலமைப்பின் விதிகளின்படி நடைபெறும்.

முன்னதாக ஜிஆர்எஸ் தலைவரான முதலமைச்சர், காலை 8.51 மணிக்கு இஸ்தானா நெகிரி ஸ்ரீ கினாபாலுவின் மைதானத்திற்குள் நுழைவதைக் காண முடிந்தது.

காலை 10.15 மணியளவில் அவர் அரண்மனையை விட்டு வெளியேறுவதை காண முடிந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

- பார்த்திபன் நாகராஜன்

பகிர்
+ - reset