பாகிஸ்தான் பிரதமரின் மலேசியா வருகை வலுவான இருதரப்பு உறவுகளைப் பிரதிபலிக்கிறது: டத்தோஸ்ரீ அன்வார்
கோலாலம்பூர்:
பாகிஸ்தான் பிரதமரின் மலேசியா வருகை வலுவான இருதரப்பு உறவுகளைப் பிரதிபலிக்கிறது.
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இதனை தெரிவித்தார்.
பாகிஸ்தான் பிரதமர் முகமது ஷெபாஸ் ஷெரீப் மூன்று நாள் பயணமாக மலேசியா வந்துள்ளார்.
அவரின் இந்த பயணம் இரு நாடுகளுக்கும் இடையிலான நெருங்கிய உறவைப் பிரதிபலிக்கிறது.
அதே நேரத்தில் பரஸ்பர நன்மைக்காக ஒத்துழைப்பின் புதிய பகுதிகளை ஆராயவும் வழி வகுக்கிறது.
மேலும் மலேசியா, பாகிஸ்தான் மக்களின் நலனுக்காக வர்த்தகம், முதலீடு, ஹலால் தொழில், கல்வி, சுற்றுலா, பாதுகாப்பு போன்ற துறைகளில் புதிய ஒத்துழைப்பு வாய்ப்புகளை ஆராய பல்வேறு நிகழ்ச்சி நிரல்கள் இந்த பயணத்தின் போது ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்தப் பயணம், அக்டோபர் 2024 இல் பாகிஸ்தானுக்கு நான் மேற்கொண்ட அதிகாரப்பூர்வ பயணத்திற்குப் பரஸ்பரம் ஒரு பயணமாகும்
மேலும் இது இரு நாடுகளுக்கும் இடையிலான வலுவான நட்பின் பிணைப்பைப் பிரதிபலிக்கிறது.
அதே வேளையில் மலேசியா-பாகிஸ்தான் உறவுகள் எதிர்காலத்தில் தொடர்ந்து செழித்து வளரட்டும் என்று பிரதமர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்

