images

பிரிக்பீல்ட்ஸ் தீபாவளி சந்தை வர்த்தகர்களின் வைப்புத் தொகை விரைவில் திரும்பித் தரப்படும்: டத்தோஸ்ரீ ரமணன்

image

பிரிக்பீல்ட்ஸ் தீபாவளி சந்தை வர்த்தகர்களின் வைப்புத் தொகை விரைவில் திரும்பித் தரப்படும்: டத்தோஸ்ரீ ரமணன்

கோலாலம்பூர்:

பிரிக்பீல்ட்ஸ் தீபாவளி சந்தை  வர்த்தகர்களின் வைப்புத் தொகை விரைவில் திரும்பத் தரப்படும்.

தொழில் முனைவோர் மேம்பாடு கூட்டுறவு துணையமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமக்கிருஷ்ணன் இதனை கூறினார்.

பிரிக்பீல்ட்ஸ் தீபாவளி சந்தை செயல்பாடுகளைத் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

இதனால் சம்பந்தப்பட்ட வர்த்தகர்களுக்கு விரைவில் அவர்களின் வைப்புத்தொகை திரும்பித் தரப்படும்.

மேலும் கோலாலம்பூர் மாநகர் மன்றம்  பிரிக்பீல்ட்ஸ் லிட்டில் இந்தியாவில்  ஒரு புதிய, வலுவான, பெரிய கூடாரத்தை நிறுவியுள்ளது.

தீபாவளி சந்தை ஏற்பாடு செய்வதில் தானோ அல்லது அமைச்சோ நேரடியாக ஈடுபட்டுள்ளது என்பது  தவறான கருத்தாகும்.

பிரச்சினை எழுந்த பின்னரே எங்கள் தரப்பு தலையிட்டது. ஆரம்பத்தில் இந்த விஷயம் குறித்து எங்களுக்குத் தெரியாது.
புதிய, பாதுகாப்பான மற்றும் வலுவான கூடாரத்தை பொதுமக்கள் தாங்களாகவே பார்க்க வேண்டும்.

முந்தைய கூடாரம் மிகவும் சிறியதாகவும் தரம் குறைந்ததாகவும் இருப்பதாக வணிகர்களால் விமர்சிக்கப்பட்டது.

அப்பிரச்சினைகள் அனைத்தும் தற்போது சரி செய்யப்பட்டுள்ளது என்று டத்தோஸ்ரீ ரமணன் கூறினார்.

முன்னதாக ஒவ்வொரு வர்த்தகரும் ஒரு லாட்டிற்கு 2,500 ரிங்கிட் செலுத்துகிறார்கள்.

இதில் 2,000 ரிங்கிட் வைப்புத்தொகை, சேவை கட்டணம் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

- பார்த்திபன் நாகராஜன்

பகிர்
+ - reset