பெட்ரோல் நிலையத்தில் தீ விபத்து: பொதுமக்கள் பதற்றம்
பாலிங்:
பாலிங் கம்போங் பண்டார் முகிம் சியோங்கைச் சுற்றியுள்ள குடியிருப்பாளர்கள் நேற்று இரவு ஒரு பெட்ரோல் நிலையத்தில் தீ எரிவதைக் கண்டு பதற்றமடைந்தனர்.
பாலிங் தீயணைப்பு, மீட்பு நிலையத்தின் தலைவரான உதவி தீயணைப்பு கண்காணிப்பாளர் சூல்கைரி மாட் தன்ஜில் இதனை கூறினார்.
இரவு 8.52 மணிக்கு சம்பவம் குறித்து தங்களுக்கு அழைப்பு வந்தது.
உடனே சம்பவ இடத்திற்கு தீயணைப்புப் படை அதிகாரிகள் விரைந்து சென்றனர்.
சம்பவ இடத்தில் பெட்ரோல் நிலையத்தில் உள்ள பெட்ரோல் பம்பில் மட்டுமே தீ விபத்து ஏற்பட்டது.
அதிகாரிகள் மேற்கொண்ட விரைவான நடவடிக்கையால், முழு பெட்ரோல் நிலையத்திலும் தீ பரவாமல் கட்டுப்படுத்த முடிந்தது.
இந்த சம்பவத்தில் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை.
பெட்ரோல் நிலைய கட்டமைப்புகள், உபகரணங்கள் மட்டுமே தீயில் சேதமடைந்தன என்று சூல்கைரி கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்

