images

தொழில்நுட்ப ஆய்வு, நிர்வாக ஈடுபாட்டிற்குப் பிறகு 60 மாடி கட்டிடம் கட்ட முடிவு எடுக்கப்படும்: டிபிகேஎல்

image

தொழில்நுட்ப ஆய்வு, நிர்வாக ஈடுபாட்டிற்குப் பிறகு 60 மாடி கட்டிடம் கட்ட முடிவு எடுக்கப்படும்: டிபிகேஎல்

கோலாலம்பூர்:

தொழில்நுட்ப ஆய்வு, நிர்வாக ஈடுபாட்டிற்குப் பிறகு  60 மாடி கட்டிடம் கட்ட முடிவு எடுக்கப்படும்.

டிபிகேஎல் எனும் கோலாலம்பூர் மாநகர் மன்றம் இதனை தெரிவித்தது.

புக்கிட் டாமன்சாரா பகுதியில் 60 மாடி கட்டிடம் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது.

இக்கட்டிடம் குறித்த எந்தவொரு முடிவும், தொழில்நுட்ப ஆய்வு நடத்தப்பட்டு, பங்குதாரர் ஈடுபாட்டு அமர்வு நடத்தப்பட்ட பின்னரே எடுக்கப்படும்.

சம்பந்தப்பட்ட விண்ணப்பத்தை இன்னும் பரிசீலிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.

இதனால் அது குறித்து இன்னும் இறுதி முடிவை எடுக்கவில்லை என்றும் அது விளக்கியுள்ளது.

எந்தவொரு இறுதி முடிவும் ஒரு விரிவான ஈடுபாட்டு செயல்முறை மற்றும் தொழில்நுட்ப மதிப்பாய்வு மேற்கொள்ளப்பட்ட பின்னரே எடுக்கப்படும்.

நகர்ப்புற மேம்பாடு தொடர்பான ஒவ்வொரு முடிவும் எப்போதும் இருக்கும் கொள்கைகள், அரசு பதிவேட்டில் வெளியிடப்பட்ட மேம்பாட்டுத் திட்டங்களை அடிப்படையாகக் கொண்டது என்பதை டிபிகேஎல் வலியுறுத்த விரும்புகிறது.

முன்னதாக ஒரு கட்டுமானத் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கு முன்பு, சுற்றியுள்ள குடியிருப்பாளர்களுக்கு ஏற்படும் பக்க விளைவுகளை முதலில் ஆராயுமாறு முன்னாள் சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுடின் வலியுறுத்தி இருந்தார்.

இதற்கு பதிலளிக்கும் வகையில் டிபிகேஎல் இவ்வாறு கருத்து தெரிவித்தது.

- பார்த்திபன் நாகராஜன்

பகிர்
+ - reset