குடிநுழைவுத் துறையின் முத்திரையை போலியாக தயாரித்ததற்காக தேசிய கால்பந்து வீரரின் மாமியார் கைது
கோம்பாக்:
குடிநுழைவுத் துறையின் முத்திரையை போலியாக தயாரித்ததற்காக தேசிய கால்பந்து வீரரின் மாமியார் கைது செய்யப்பட்டார்.
கோம்பாக் போலிஸ் படைத் தலைவர் நூர் அரிபின் முஹம்மது நசீர் இதனை தெரிவித்தார்.
கோம்பாக் நகரில் 27 வயதுடைய வெளிநாட்டவர் வசித்து வந்த ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் போலிசார் முதலில் சோதனை நடத்தினர்.
அப்போது குடிநுழைவுத் துறையின் முத்திரைகளை போலியாக தயாரிக்கப் பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் பொருட்களை அதிகாரிகள் கைப்பற்றினர்.
இதனைத் தொடர்ந்து கடப்பிதழ் முத்திரை மோசடியில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் ஒரு தேசிய கால்பந்து வீரரின் மாமியாரான ஒரு பெண்ணையும், நான்கு வெளிநாட்டு ஆண்களையும் அதிகாரிகள் கைது செய்தனர்.
கோம்பாக் வணிக குற்றப் புலனாய்வுப் பிரிவின் உறுப்பினர்கள் குழுவால் கடந்த புதன்கிழமை அனைத்து சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டதாகவும், விசாரணைக்கு உதவ ஒரு வாரம் காவலில் வைக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்

