images

மதுபானம் பரிமாறியது தொடர்பான பிரச்சினை அமைச்சரவையில் விவாதிக்கப்படும்: ஜாஹித்

image

மதுபானம் பரிமாறியது தொடர்பான பிரச்சினை அமைச்சரவையில் விவாதிக்கப்படும்: ஜாஹித்

கோலாலம்பூர்:

மதுபானம் பரிமாறியது தொடர்பான பிரச்சினை அடுத்த அமைச்சரவையில் விவாதிக்கப்படும்.

துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ ஜாஹித் ஹமிடி இதனை தெரிவித்தார்.

மலேசியாவின் சுற்றுலா சம்பந்தப்பட்டதாகக் கூறப்படும் நிகழ்வில் மதுபானம் பரிமாறும் விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நடவடிக்கையை பொருத்தமற்றது. மலேசியா ஓர் இஸ்லாமிய நாடு என்ற நிலைப்பாட்டிற்கு இது முரணானது.

அம்னோவின் கருத்து வேறுபாடு காரணமாக நான் தனிப்பட்ட முறையில் இந்த விவகாரத்தை அமைச்சரவைக் கூட்டத்திற்குக் கொண்டு வருவேன்.

மேலும் கட்சித் தலைவர் என்ற முறையில், இது எங்கள் நாட்டில் இதுவரை நடத்தப்படாத ஒரு நிகழ்வு என்பதால், இந்த நிகழ்வை நாங்கள் 100% நிராகரிக்கிறோம் என்று அவர் கூறினார்.

முன்னதாக சுற்றுலா, கலை, கலாச்சார அமைச்சர் தியோங் கிங் சிங், அரசாங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட இரவு உணவில் மதுபானங்கள் பரிமாறப்பட்டதாக மஸ்ஜித் தானா நாடாளுமன்ற உறுப்பினர் எர்மியதி சம்சுடின் கூறியதில் தனது அமைச்சின் தலையீட்டை மறுத்தார்.

மேலும் அந்த நிகழ்வு உண்மையில் தொழில்துறையால் ஏற்பாடு செய்யப்பட்டது என்றும் விளக்கினார்.

- பார்த்திபன் நாகராஜன்

பகிர்
+ - reset