காசாவுக்கான மனிதாபிமான நாயகர்களின் வருகையை கொண்டாட அரசு சிறப்புக் கூட்டத்தை ஏற்பாடு செய்யும்: பிரதமர்
கோலாலம்பூர்:
காசாவுக்கான மனிதாபிமான நாயகர்களின் வருகையை கொண்டாட அரசு சிறப்புக் கூட்டத்தை ஏற்பாடு செய்யும்.
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இதனை கூறினார்.
குளோபல் சுமுத் ஃப்ளோட்டிலா (ஜிஎஸ்எப்) மனிதாபிமானப் பணியில் 23 மலேசியர்கள் பங்கேற்றனர்.
பல சவால்களுக்கு மத்தியில் தாயகத்திற்குத் திரும்புவதைக் கொண்டாட மடானி அரசாங்கம் ஒரு சிறப்புக் கூட்டத்தை ஏற்பாடு செய்யும்.
மலேசியர்களுக்கும் பாலஸ்தீனியர்களுக்கும் இடையே ஒற்றுமையை தொடர்ந்து வளர்ப்பதற்காகவும் இந்தக் கூட்டம் நடத்தப்படும்.
இறைவன் நாடினால், அவர்கள் கோலாலம்பூருக்கு வருவதை நான் வரவேற்பேன்.
நாங்கள் ஒரு நேரத்தையும் ஏற்பாடு செய்ய முயற்சிப்போம்.
இரவில், அவர்களின் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ள (அவர்களுக்காக) ஒரு சிறிய கூட்டத்தை நடத்துவோம், அது நன்றாக இருக்கும்.
துருக்கியின் இஸ்தான்புல்லில் மலேசியக் குழுவுடனான உரையாடலின் பதிவை உள்ளடக்கிய ஒரு பேஸ்புக் பதிவில் அன்வர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்

