விடுவிப்புப் படிவம் சரணடைவதற்கு அல்ல; விடுதலையை எளிதாக்குகிறது: முஹம்மத் ஹசான்
சிரம்பான்:
காசா தன்னார்வலர்களுக்கான விடுவிப்புப் படிவம் சரணடைவதற்கு அல்ல. விடுதலையை எளிதாக்குகிறது.
வெளியுறவு அமைச்சர் டத்தோஸ்ரீ முஹம்மத் ஹசான் இதனை கூறினார்.
குளோபல் சுமுத் ஃப்ளோட்டிலா (ஜிஎஸ்எஃப்) மனிதாபிமானப் பணியில் பங்கேற்கும் 23 பேரும் உடனடியாக வெளியேறுவதற்கான கோரிக்கை படிவத்தில் கையெழுத்திடவில்லை என்றால், அவர்கள் இஸ்ரேலிய அதிகாரிகளால் நீண்ட காலம் தடுத்து வைக்கப்படலாம்.
இந்தப் படிவம் அவர்களை சரணடையச் சொல்லவில்லை.
மாறாக அவர்களின் தாய்நாட்டிற்கு திருப்பி அனுப்பும் செயல்முறையை எளிதாக்குவதற்காகவே என்று அவர் கூறினார்.
எனவே ஜிஎஸ்எப் பங்கேற்பாளர்கள் படிவத்தில் கையொப்பமிட வேண்டும் என்ற அழைப்பை பொதுமக்கள் தவறாகப் புரிந்து கொள்ள மாட்டார்கள்.
ஜிஎஸ்எப் பங்கேற்பாளர்கள் இந்த வெளீயீட்டுப் படிவத்தில் கையெழுத்திட வேண்டும் என்ற எனது பரிந்துரையை அவர்கள் விமர்சித்து கண்டிக்கும்போது பலருக்குப் புரியவில்லை.
இந்தப் பணியில் சேருவதற்கு முன்பு இது உண்மையில் ஒரு நிலையான செயல்பாட்டு நடைமுறையாகும் என்று அவர் கூறினார்.
- பார்த்திபன்bநாகராஜன்

