பொந்தியானில் திடீர் வெள்ளம்: பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் மாற்றம் இல்லை
ஜொகூர்பாரு:
மாவட்டத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தைத் தொடர்ந்து பொந்தியனில் தற்காலிக வெள்ள நிவாரண மையம் திறக்கப்பட்டுள்ளது.
மேலும் வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்ட பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்று காலை நிலவரப்படி மாறவில்லை.
நேற்று காலை 6 மணிக்கு இங்குள்ள தேசியப் பள்ளியில் திறக்கப்பட்ட நிவாரண மையத்தில் 46 குடும்பங்களைச் சேர்ந்த 159 பாதிக்கப்பட்டவர்களை இன்னும் தங்க வைத்துள்ளனர்.
ஜொகூர் மாநில செயலாளர் டத்தோ அஸ்மான் ஷா அப்துல் ரஹ்மான் இதனை தெரிவித்தார்.
கம்போங் மெலாயு ராயா, கம்போங் பாயா எம்பன், கம்போங் பாக் கலிப், கம்போங் செரி மெனந்தி, கம்பங் மஜு ஜெயா ஆகிய இடங்களைச் சேர்ந்தவர்கள் தற்போது நிவாரண மையங்களில் தங்கியுள்ளனர்.
- பார்த்திபன் நாகராஜன்

