images

இஸ்ரேலில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 23 மலேசிய தன்னார்வலர்கள் விடுவிக்கப்பட்டனர்: பிரதமர் அன்வார்

image

இஸ்ரேலில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 23 மலேசிய தன்னார்வலர்கள் விடுவிக்கப்பட்டனர்: பிரதமர் அன்வார்

புத்ராஜெயா:

இஸ்ரேலில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 23 மலேசிய தன்னார்வலர்கள் விடுவிக்கப்பட்டனர்

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இதனை கூறினார்.

காசாவிற்கு குளோபல் சவுத் ஃப்ளோட்டிலா (ஜிஎஸ்எப்) மனிதாபிமானப் பணியில் 23 மலேசியர்கள் பங்கேற்றிருந்தனர்.

அதே வேளையில் அவர்கள் அனைவரும் சியோனிச இஸ்ரேலிய ஆட்சியால் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில் சம்பந்தப்பட்ட  23 மலேசிய தன்னார்வலர்களும் விடுவிக்கப்பட்டனர்.

துருக்கியின் இஸ்தான்புல்லுக்குச் செல்வதற்கு முன்பு, அவர்கள் இன்று மாலை இஸ்ரேலில் உள்ள ரமோன் விமான நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

மலேசிய ஆர்வலர்கள் அனைவரும் நாளை இரவு அல்லது மறுநாள் வீடு திரும்பத் தொடங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

பகிர்
+ - reset