காசாவுக்கான தன்னார்வ உதவிகளை தடுக்கும் இஸ்ரேலை உலக நாடுகள் கண்டிக்க வேண்டும்: டத்தோ சரவணக்குமார்
நீலாய்:
காசாவுக்கான தன்னார்வ உதவிகளை தடுக்கும் இஸ்ரேலை உலக நாடுகள் கண்டிக்க வேண்டும்.
சிரம்பான் தொகுதி பெர்சத்து சயாப் பிரிவுத் தலைவரும் நீலாய் சட்டமன்ற தொகுதி ஒருங்கிணைப்பாளருமான டத்தோ சரவணக்குமார் இதனை கூறினார்.
ஜிஎஸ்எப் எனும் குளோபல் சவுத் சீஸ் ஃபுளோட்டிலா குழுவினர் காசாவுக்கான மனிதாபிமானப் பணிகளை மேற்கொண்டுள்ளனர்.
கடல் வழியாக காசா மக்களுக்கான உணவு, மருந்துகள் உட்பட பல பொருட்களை அக்குழுவினர் கொண்டு செல்கின்றனர்.
ஆனால் அக்குழுவை இஸ்ரேல் படையினர் தடுத்து நிறுத்தினர்.
குறிப்பாக மலேசியர்கள் உட்பட தன்னார்வாளர்களை இஸ்ரேல் படையினர் கடத்தி, தடுத்து வைத்துள்ளனர்.
இஸ்ரேலில் இந்நடவடிக்கை கண்டிக்கத்தக்கது. காட்டுமிராண்டித் தனமானது.
இஸ்ரேலின் இந்நடவடிக்கையை உலக நாடுகள் கண்டிக்க வேண்டும்.
மேலும் இஸ்ரேலுக்காக எதிராக தீர்க்கமான உறுதியான முடிவை எடுக்க வேண்டும் என்று அவர் கூறினார்.
இஸ்ரேல் பிடியில் இருந்து மலேசிய தன்னார்வலர்களை மீட்க அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இவ்வேளையில் அரசுக்கு எனது நன்றிகள் என்று டத்தோ சரவணக்குமார் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்

