தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இரண்டு கூடுதல் ஈடிஎஸ் ரயில் சேவைகள்: கேடிஎம்பி
கோலாலம்பூர்:
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இரண்டு கூடுதல் ஈடிஎஸ் ரயில் சேவைகள் வழங்கப்படவுள்ளது.
கேடிஎம்பி ஓர் அறிக்கையின் வாயிலாக இதனை தெரிவித்தது.
தீபாவளி கொண்டாட்டங்களுடன் இணைந்து பாடாங் பெசார் - கேஎல் சென்ட்ரல் வழித்தடத்திற்கு கூடுதலாக இரண்டு ஈடிஎஸ் ரயில் சேவைகள் வழங்கப்படவுள்ளது.
வரும் அக்டோபர் 17, 2025 முதல் அக்டோபர் 22, 2025 வரை தினமும் இரண்டு கூடுதல் சேவைகள் மக்களுக்காக வழங்கப்படும்.
தீபாவளி கொண்டாட்டங்களின் போது எதிர்பார்க்கப்படும் பயணிகளின் தேவை அதிகரிப்பை பூர்த்தி செய்யும் வகையில், ஆறு நாட்களுக்கு இந்த கூடுதல் ரயில் சேவைகள் அமலில் இருக்கும்.
இதற்கான டிக்கெட்டுகளின் விற்பனை அக்டோபர் 7ஆம் தேதியன்று செவ்வாய்கிழமை காலை 10 மணி முதல் தொடங்கும்.
இந்த கூடுதல் ரயில் ஒரு நாளைக்கு 630 இருக்கைகளுடன் பயணிக்கும்.
இது வணிக வகுப்பு பெட்டிகள் உட்பட மொத்த இருக்கைகளின் எண்ணிக்கையை 3,780 ஆகக் கொண்டு வருகிறது.
பயணிகள் கேடிஎம்பி KITS அல்லது அதிகாரப்பூர்வ KTMB வலைத்தளம் வழியாக டிக்கெட்டுகளை வாங்கி கொள்ளலாம் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
- பார்த்திபன் நாகராஜன்

