புக்கிட் காஜாங் டோல் சாவடியை மோதிய லோரியில் இருந்து ஓட்டுநர் குதித்த வீடியோ காட்சிகள் வைரலாகின்றன
காஜாங்:
புக்கிட் காஜாங் டோல் சாவடியை மோதிய லோரியில் இருந்து ஓட்டுநர் குதித்த வீடியோ காட்சிகள் தற்போது வைரலாகின்றன.
கடந்த சனிக்கிழமை புக்கிட் காஜாங் டோல் சாவடியில் கோரமான சாலை விபத்து நிகந்தது.
இந்த சம்பவம் ஒரு வயது குழந்தையின் உயிரைப் பறித்ததுடன் ஏழு பேர் காயமடைந்தனர்.
இந்நிலையில் சமீபத்தில் வைரலாகி வரும் ஒரு டேஷ்கேம் வீடியோ விபத்து குறித்து புதிய கேள்விகளை எழுப்பியுள்ளது.
பொதுமக்களின் கவனத்தை ஈர்த்துள்ள 33 வினாடி காட்சிகள், மோதல் நடந்த தருணம் உட்பட, சம்பவத்திற்கு முந்தைய தருணங்களைக் காட்டுகின்றன.
வீடியோவில் லோரி ஓட்டுநர் வேகமாக வந்த வாகனத்திலிருந்து குதித்து வெளியேறியது தெளிவாகத் தெரிகிறது.
கனரக வாகனம் கட்டுப்பாட்டை இழந்து டோல் சாவடியை மோதியதற்கு நீண்ட நேரத்திற்கு முன்பே இது நடந்துள்ளதாக நம்பப்படுகிறது.
- பார்த்திபன் நாகராஜன்

