images

கெடாவில் திடீர் வெள்ளம்: 200 பேர் வெள்ள நிவாரண மையங்களில் தங்கியுள்ளனர்

image

கெடாவில் திடீர் வெள்ளம்: 200 பேர் வெள்ள நிவாரண மையங்களில் தங்கியுள்ளனர்

அலோர் ஸ்டார்:

கெடாவில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 200 பேர் வெள்ள நிவாரண மையங்களில் தங்கியுள்ளனர்.

கெடா பொது பாதுகாப்புப் படையின் துணை இயக்குநர் மேஜர்  முஹம்மது சுஹைமி முகமது ஜைன் இதனை தெரிவித்தார்.

நேற்று மாலை முதல் பெய்த கனமழையைத் தொடர்ந்து கெடாவில் நீர்மட்டம் உயர்ந்தது.

இதனால் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தைத் தொடர்ந்து 50 குடும்பங்களைச் சேர்ந்த 200 பேர் பாதிக்கப்பட்டனர்.

அவர்களை தங்க வைப்பதற்காக பொக்கோக் சேனா மாவட்டத்தில் நேற்று இரவு ஒரு தற்காலிக நிவாரண மையம்  திறக்கப்பட்டது.

இந்த திடீர் வெள்ளத்தால் கம்போங் சுங்கை துரியன், கம்போங் டெமேடு, கம்போங் புலாவ் நியோர், தாமான் புட் ஆகிய இடங்கள் பாதிக்கப்பட்டுள்ளன என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

பகிர்
+ - reset