காசாவுக்கான அப்பாவி தன்னார்வலர்களை கடத்திய இஸ்ரேலிய ஆட்சியின் நடவடிக்கை கொடூரமானது: பிரெஸ்மா
காசாவுக்கான அப்பாவி தன்னார்வலர்களை கடத்திய இஸ்ரேலிய ஆட்சியின் நடவடிக்கை கொடூரமானது: பிரெஸ்மா
கோலாலம்பூர்:
காசாவுக்கான அப்பாவி தன்னார்வலர்களை கடத்திய இஸ்ரேலிய ஆட்சியின் நடவடிக்கை கொடூரமானது.
பிரெஸ்மா தலைவர் டத்தோ ஹாஜி ஜவஹர் அலி இதனை கூறினார்.
காசா மக்களுக்கு உதவிப் பொருட்களை கொண்டு சேர்க்கும் பணியில் ஜிஎஸ்எப் தன்னார்வாளர்கள் குழுவின் ஈடுப்பட்டுள்ளனர்.
சம்பந்தப்பட்ட தன்னார்வலர்களை இஸ்ரேலிய படையினர் தடுத்ததுடன் அவர்களை கடத்தியுள்ளனர்.
மனிதாபிமான கடற்படை பணியில் ஈடுபட்டுள்ள அப்பாவி தன்னார்வலர்களை கடத்திய சியோனிச ஆட்சியின் நடவடிக்கைகளை கடுமையாக கண்டிக்கிறது.
இந்த கொடூரமான, மனிதாபிமானமற்ற நடவடிக்கையாகும்.
மேலும் மனித உரிமைகள் சர்வதேச சட்டத்தின் கொள்கைகளை இஸ்ரேல் மீறுவதை தெளிவாக காட்டுகிறது.
அனைத்து தன்னார்வலர்களையும் உடனடியாக விடுவிக்கக் கோருவதில் பிரெஸ்மா அனைத்துலக சமூகத்துடன் உறுதியாக நிற்கிறது.
மேலும் பாலஸ்தீன மக்களுக்கும் மனிதாபிமானப் போராட்டத்திற்கு உதவுபவர்களுக்கும் எதிரான கொடுமை உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.
ஒடுக்கப்பட்ட பாலஸ்தீன மக்களைப் பாதுகாப்பதில் ஒற்றுமையைக் காட்டவும், ஆதரவை வலுப்படுத்தவும், உண்மையைப் பேச பயப்பட வேண்டாம் என்றும் அனைத்து மலேசியர்களையும் பிரெஸ்மா அழைக்கிறது என்று அவர் கூறினார்.
இந்த தொடர்ச்சியான அட்டூழியத்தை எதிர்கொள்ளும்போது உலகம் இனி அமைதியாக இருக்க முடியாது.
தாமதத்தின் ஒவ்வொரு கணமும் உலகளாவிய மனித விழுமியங்களுக்கு துரோகமாகும்.
ஆக ஐக்கிய நாடுகள் சபை (ஐ.நா.), இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு, நீதியை விரும்பும் அனைத்து அரசாங்கங்களும் வெற்று கண்டனங்களை மட்டும் கூறாமல், உறுதியான நடவடிக்கைகளுடன் உடனடியாக செயல்பட வேண்டும்.
அதே வேளையில் அனைத்துலக அளவில் பாலஸ்தீன பிரச்சினையில் எப்போதும் வெளிப்படையாகக் குரல் கொடுத்து வரும் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையில் அரசுக்கு பிரெஸ்மா முழு ஆதரவை வெளிப்படுத்துகிறது என்று டத்தோ ஜவஹர் அலி கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்

