images

பாஸ் தலைவர்களை டிரம்ப் சந்திக்க விரும்புகிறாரா?: ரபிசி

image

பாஸ் தலைவர்களை டிரம்ப் சந்திக்க விரும்புகிறாரா?: ரபிசி

கோலாலம்பூர்:

பாஸ் தலைவர்களை அமெரிக்க அதிபர் டிரம்ப் சந்திக்க விரும்புகிறாரா என ரபிசி ரம்லி நகைச்சுவையாக கேள்வி எழுப்பினார்.

பாலஸ்தீன மோதல் குறித்து தனது கருத்துக்களை தெரிவிக்க அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை சந்திக்க பாஸ் தயாராக இருப்பதாக கூறியுள்ளது.

இதை கேலி செய்த ரபிசி இந்த யோசனை மிகவும் முட்டாள்தனமானது என்றார்.

இந்த மாத இறுதியில் ஆசியான் உச்ச நிலை மாநாட்டில் டிரம்ப் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் அவர் பாஸ் பொதுச் செயலாளர் தக்கியூடின் ஹாசனை சந்திக்க விரும்புவார் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை.

பாஸ்,  தக்கியூடின் தங்கள் ஆதரவாளர்களுக்கு பெருமை காட்ட விரும்புகிறார்கள் என்று நான் நினைக்கிறேன். 

அமெரிக்க தூதரகம்கூட இந்த செய்தியைப் பார்த்து சிரிக்கக்கூடும்.

அரசியல்வாதிகள் பெரும்பாலும் தங்கள் ஆதரவாளர்களையும் தொண்டர்களையும் திருப்திப்படுத்துவதற்காகவே அறிக்கைகளை வெளியிடுகிறார்கள்

சில சமயங்களில் அவை அருவருப்பாக இருந்தாலும் கூட அதை சமாளிக்கின்றனர் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

பகிர்
+ - reset