எஸ்.பி.எம். தமிழ்மொழி தேர்வில் சிறப்பு தேர்ச்சி பெற்று மாணவர்கள் சாதனை படைக்க வேண்டும்: டத்தோ ஷண்முகம்
மலாக்கா:
வரும் நவம்பர் மாதம் எஸ்பிஎம் தேர்வில் அமரவிருக்கும் இந்திய மாணவர்கள் தமிழ் மொழி மற்றும் தமிழ் இலக்கிய பாடத்தில் சிறப்பு தேர்ச்சி பெற்று சாதனை படைக்க வேண்டும்.
மலாக்கா மாநில ஆட்சிக்குழு உறுப்பினரும் காடேக் சட்டமன்ற உறுப்பினருமான டத்தோ விபி. ஷண்முகம் இதனை வலியுறுத்தினார்.
மலாக்கா குபு தமிழ்ப்பள்ளி மண்டபத்தில் நடைப்பெற்ற எஸ்.பி.எம் தமிழ் மற்றும் தமிழ் இலக்கிய பயிலரங்கினை மாநில மஇகா சிறப்பாக ஏற்று நடத்தியது.
நமது மாணவர்கள் தமிழ்ப் மொழியில் சிறப்பு தேர்ச்சி பெற வேண்டும்.
பல லட்சியக் கனவோடு படித்து சிறப்பு தேர்ச்சி பெறுங்கள்.ஒரு மாணவனின் எதிர்காலத்திற்குக் கல்வியே மிகப்பெரிய அடித்தளம்.
பெற்றோர்களின் ஆசையை நிறைவேற்ற மாணவர்கள் விடாமுயற்சியுடன் படிக்க வேண்டும்.
ஆகவே நமது இந்திய மாணவர்கள் உயர்ந்த லட்சியத்துடன் எஸ்பிஎம் தேர்வை எழுதி சிறந்த தேர்ச்சி பெற மனதார வாழ்த்துகிறேன் என்றார் டத்தோ ஷண்முகம்.
இந்த வழிகாட்டி பயிற்சி பட்டறையை ஆசிரியர் இன்பசேகரன் இனிதே வழிநடத்தினர்.
மேலும் இந்நிகழ்வுக்கு மாநில கல்வி இலாகாவின் தமிழ் தமிழ்மொழி பிரிவு உதவி இயக்குனர் முருகையா வருகைப் புரிந்தார்.
- பார்த்திபன் நாகராஜன்

