இஸ்ரேல் எதிர்ப்பு பேரணியின் போது போலிசாரின் நடவடிக்கைகளை உள்துறை அமைச்சர் நியாயப்படுத்தினார்
புத்ராஜெயா:
இஸ்ரேல் எதிர்ப்பு பேரணியின் போது போலிசார் மேற்கொண்ட நடவடிக்கைகளக் உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைபுடின் நசுதியோன் இஸ்மாயில் நியாயப்படுத்தியுள்ளார்.
பாலஸ்தீன மக்களின் துயர நிலைக்கு தனது ஒற்றுமையை வெளிப்படுத்திய அவர்,
பேரணியின் போது போலிசார் தங்கள் கடமைகளைச் செய்வதைத் தடுக்க முயன்றதாகக் கூறப்படும் சில பொறுப்பற்ற தரப்பினரின் செயல்களைக் கண்டித்தார்.
பொது பாதுகாப்பு, ஒழுங்கை உறுதி செய்வதற்காக போலிஸ் உறுப்பினர்கள் களத்தில் உள்ளனர்,
ஆனால் போலிஸ் அதிகாரிகளை காயப்படுத்தும் அளவிற்கு வரம்புகளை மீறிச் செயல்பட்ட சில தரப்பினரும் உள்ளனர் என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
நேற்று மாலை கோலாலம்பூரில் உள்ள அமெரிக்க தூதரகத்திற்கு வெளியே நடந்த பேரணியில், போலிசாரின் பணிக்கு இடையூறு விளைவித்ததாகக் கூறி இரண்டு நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
- பார்த்திபன் நாகராஜன்

