காசாவில் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான டிரம்பின் 20 அம்ச அமைதித் திட்டம் ஒரு சலுகை அல்ல, மாறாக அது ஓர் அச்சுறுத்தல்: துன் மகாதீர்
கோலாலம்பூர்:
காசாவில் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான அமெரிக்க அதிபர் டிரம்பின் 20 அம்ச அமைதித் திட்டம் ஒரு சலுகை அல்ல, மாறாக அது ஓர் அச்சுறுத்தல்.
முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமது இதனை கூறினார்.
அமெரிக்கா இஸ்ரேலுடன் இணைந்து தயாரித்த முன்மொழியப்பட்ட திட்டத்தை ஹமாஸ் நிராகரிக்கும் என்று தான் எதிர்பார்க்கிறேன்.
பாலஸ்தீன மக்களுக்கு எதிராக இஸ்ரேல் நடத்திய படுகொலையை நிறுத்துவதற்கான 20 அம்சத் திட்டம் ஹமாஸுக்கு ஒரு சலுகை அல்ல. இது தெளிவாக சொல்லப்பட்ட ஓர் அச்சுறுத்தல்.
ஆக ஹமாஸ் இந்த திட்டத்தை நிராகரித்தால் நான் ஆச்சரியப்பட மாட்டேன். படுகொலை இன்னும் அதிக சக்தியுடன் தொடரும்.
மேலும் அமெரிக்காவின் ஆதரவும் இதற்கு உண்டு.
அமெரிக்காவும் இஸ்ரேலும் முன்மொழிவது காசாவில் இழந்த அனைத்து உயிர்களையும் மொத்த அழிவையும் வீணடிப்பதாகும். அவர்களின் தியாகங்கள் வீணாகிவிடும் என்று அவர் இன்று சமூக ஊடகங்கள் மூலம் கூறினார்.
கடந்த திங்களன்று, வெள்ளை மாளிகையில் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் ஒரு செய்தியாளர் சந்திப்பில் காசாவில் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான 20 அம்ச அமைதித் திட்டத்தை டிரம்ப் வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
- பார்த்திபன் நாகராஜன்

