images

காசா தன்னார்வலர்களை தடுப்பது உலகளாவிய மனிதாபிமான விழுமியங்களுக்கு எதிரானது: மாமன்னர்

image

காசா தன்னார்வலர்களை தடுப்பது உலகளாவிய மனிதாபிமான விழுமியங்களுக்கு எதிரானது: மாமன்னர்

கோலாலம்பூர்:

காசா தன்னார்வலர்களை தடுப்பது உலகளாவிய மனிதாபிமான விழுமியங்களுக்கு எதிரானது.

மாட்சிமை தங்கிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் இதனை தெரிவித்தார்.

காசா மக்களுக்கு உரிய உதவிகளை கொண்டு சேர்க்கும் நோக்கில்  உலகளாவிய சுமுத் புளோட்டிலா  பங்கேற்பாளர்கள் மனிதாபிமானப் பணியில் ஈடுப்பட்டுள்ளனர்.

அவர்கள் உணவுப் பொருட்களைக் கொண்டுவருவதற்கான மனிதாபிமானப் பணியில் மட்டுமே இருந்தனர்.

ஆனால் அவர்கள் தடுக்கப்பட்டு தடுத்து வைக்கப்பட்டனர். இது உலகளாவிய மனிதாபிமான விழுமியங்களுக்கு எதிரானது.

காசாவில் உள்ள முதியவர்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட பசியால் வாடும் மக்களுக்கு உதவுவதில் ஜிஎஸ்எப் ஒரு தூய மனிதாபிமான பணி.

மலேசியர்கள் உட்பட இந்த பணியில் ஈடுபட்டுள்ள தன்னார்வலர்கள், மனிதாபிமான செய்தியை சர்வதேச மட்டத்திற்கு கொண்டு செல்வதற்காக ஆபத்துகளையும் சவால்களையும் ஏற்கத் தயாராக உள்ளனர் என்று அவர் கூறினார்.

உண்மையிலேயே உதவி தேவைப்படுபவர்களுக்கு உதவுவதில் ஜிஎஸ்எப் பணி எல்லையற்ற சகோதரத்துவத்திற்கு ஒரு எடுத்துக்காட்டு.

இன்று, மலேசியா நமது தன்னார்வலர்களை விடுவிப்பதில் மேற்கொண்டுள்ள முயற்சிகள் உட்பட ஜிஎஸ்எப்பின் தற்போதைய முன்னேற்றங்கள் குறித்த புதுப்பிப்பைப் பெறபேசினார்..நமது மக்களின் தன்னார்வலர்களுக்கு உதவுவதில் அரசாங்கத்தால் எடுக்கப்பட்டு அணிதிரட்டப்படும் ஒவ்வொரு உன்னத முயற்சியும் அல்லாஹ்வால் வசதி செய்யப்பட்டு பாதுகாக்கப்படட்டும் என்று மாட்சிமை தங்கிய மாமன்னர் கூறினார்.

முன்னதாக, சுல்தான் இப்ராஹிம், இஸ்தானா புக்கிட் துங்குவில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமை வரவேற்று பேசினார்.

- பார்த்திபன் நாகராஜன்

பகிர்
+ - reset