images

பேரா மாநில அரசாங்கத்தின் தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பு; அக்டோபர் 25இல் நடைபெறும்: சிவநேசன்

image

பேரா மாநில அரசாங்கத்தின் தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பு; அக்டோபர் 25இல் நடைபெறும்: சிவநேசன்

ஈப்போ:

தீபத் திருநாளை முன்னிட்டு் பேரா மாநில அரசு இம்மாதம் 25 ஆம் தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பை நடத்த உள்ளது.

ஈப்போவில் உள்ள இந்திரா மூலியா  அரங்கில் பிற்பகல் 2 மணியளவில்  நடைபெறவிருக்கும் இதில் மாநில  அரச குடும்பத்தினர்கள், மாநில மந்திரி புசார், ஆட்சிக் குழு உறுப்பினர்கள், அரசாங்க அதிகாரிகள் கலந்துக் கொள்வர்.

இந்த திறந்த இல்ல உபசரிப்பில் சுமார் 10 ஆயிரம் பேர் திரள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று பேரா மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் ஏ. சிவநேசன் கூறினார்.

பேரா மாநில அரசாங்க செயலகத்தில்  நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் இந்த தகவலை கூறினார்.

இதனிடையே  தீபத் திருநாளை முன்னிட்டு  ஈப்போ லிட்டில் இந்தியா வர்த்தக மையத்தில் தீபாவளி களை கட்டியது.

இந்த வர்த்தக மையத்தில் இம்மாதம் 6 ஆம் தேதி முதல் இம் மாதம் 19 ஆம் தேதி வரை தற்காலிக கடைகள் அமைக்கப்பட உள்ளது.

இந்த ஆண்டு இங்கு இந்த தற்காலிக கடைகள் மற்றும் தீபாவளி கலை இரவு  நிகழ்வுகளை நடத்த மாநகர் மன்றம் லிட்டில் இந்தியா வணிகர்கள் சங்கத்திற்கு அனுமதியை வழங்கியுள்ளதாக அச்சங்கத்தின் தலைவர் தி. விக்னேஸ்வரன் கூறினார்

இதில்  வணிகம் செய்யவிரும்பும் சிறு தொழில்  வணிகர்கள் தங்களின் சங்க பொறுப்பாளர்களுடன் தொடர்புகொள்ளலாம் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

ஈப்போ லிட்டில் இந்தியா வளாகத்தில் பல ஆண்டுகளை தீபத் திருநளை முன்னிடு வர்த்தக சந்தை நடத்தப்பட்டு வருகிறது.

இம்மாதம் 20 ஆம் தேதி தீபத் திருநாளை முன்னிட்டு துணிமணிகள் வாங்குவதற்கும் வாடிக்கையாளர்கள் வழக்கபோல் லிட்டில் இந்தியா வளாகத்தில் வருகை அளிக்கத் தொடங்கியுள்ளனர்.

லிட்டில் இந்தியா வளாகத்தில் இம்மாதம் 14 ஆம் தேதி முதல்  இம்மாதம் 19 ஆம் தேதி வரை கலை்பண்பாட்டு விழா நடைபெற இருப்பதாகவும் குறிப்பிட்டார்.

- பார்த்திபன் நாகராஜன்

பகிர்
+ - reset