8.4 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல்; 4 கும்பல்கள் சிக்கின: சிலாங்கூர் போலிஸ் தலைவர் ஷாசெலி
ஷாஆலம்:
நான்கு கும்பல்கள் முறியடிக்கப்பட்டதுடன் 8.4 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருட்களை போலிசார் பறிமுதல் செய்துள்ளனர்.
சிலாங்கூர் மாநில போலிஸ் தலைவர் ஷாசெலி கஹார் இதனை கூறினார்.
கடந்த செப்டம்பர் 23 முதல் 26 வரை சிலாங்கூரில் பல இடங்களில் சோதனைகள் நடத்தப்பட்டது.
இந்த சோதனையில் ஐந்து பேரை கைது செய்ததுடன் 8.4 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள பல்வேறு வகையான போதைப்பொருட்களை போலிசார் பறிமுதல் செய்தனர்.
இதன் மூலம் நான்கு போதைப்பொருள் கடத்தல் கும்பல்களை போலிசார் வெற்றிகரமாக முறியடித்துள்ளனர்.
இந்த சோதனையில், கெட்டமைன் (63.7 கிலோ), எக்ஸ்டசி (27.7 கிலோ), கஞ்சா பூக்கள் (12.3 கிலோ) மற்றும் சியாபு (2.5 கிலோ) உள்ளிட்ட 106 கிலோ எடையுள்ள பல்வேறு வகையான போதைப்பொருட்களை பறிமுதல் செய்யப்பட்டது.
பறிமுதல் செய்யப்பட்ட பிற பொருட்களின் மதிப்பு 149,540 ரிங்கிட் ஆகும் என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்

