images

பிரிக்பீல்ட்ஸ் தீபாவளி பிரத்தியேக கடைகள் பிரச்சினைக்கு தவறான புரிதலே காரணம்: ஜலேஹா

image

பிரிக்பீல்ட்ஸ் தீபாவளி பிரத்தியேக கடைகள் பிரச்சினைக்கு தவறான புரிதலே காரணம்: ஜலேஹா

கோலாலம்பூர்:

பிரிக்பீல்ட்ஸ் தீபாவளி பிரத்தியேக கடைகள் பிரச்சினைக்கு தவறான புரிதலே  முக்கிய காரணம்.

கூட்டரசுப் பிரதேச அமைச்சர் டத்தோஸ்ரீ ஜலேஹா முஸ்தபா இதனை கூறினார்.

கோலாலம்பூர், பிரிக்ஃபீல்ட்ஸில் அமைக்கப்பட்டுள்ள தீபாவளி சந்தையின் கூடாரம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இந்தப் பிரச்சினை கோலாலம்பூர் மாநகர் மன்றம், பேங்க் ரக்யாட் இடையேயான தவறான புரிதலால் ஏற்பட்டது.

நேற்று இரவு அந்தப் பகுதியில் இருந்த கூடாரங்கள் இன்னும் பெரியதாக, வலிமையான கூடாரத்தால் மாற்றப்பட்டது.

ஆக இப்பிரச்சினை எல்லாம் முடிந்துவிட்டது. 

கோலாலம்பூர், கெரிஞ்சியில்  நடந்த ஒரு நிகழ்வில் கலந்து கொண்ட பிறகு நேற்று இரவு ஒரு செய்தியாளர் கூட்டத்தில் அவர் கூறினார்.

முன்னதாக காற்று, மழையால் பிரிக்ஃபீல்ட்ஸ் லிட்டில் இந்தியா தீபாவளி சந்தையின் பல கூடாரங்கள் இடிந்து விழுந்தன.

இந்த சம்பவத்திற்கு ஒரு நாள் முன்பு, சவாலான வானிலை நிலைமைகளுக்கு ஆளானால்  இக்கூடாரங்கள் இடிந்து விழும் என்று மஇகா துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம். சரவணன் எச்சரித்திருந்தார்.

இந்த தீபாவளி பண்டிகை காலம் உண்மையில் மழைக்காலம். காற்று ஒரு முறை வீசினால், இவை அனைத்தும் பறந்து விடும் என்று அவர் எச்சரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

- பார்த்திபன் நாகராஜன்

பகிர்
+ - reset