images

இஸ்ரேலியப் படைகளால் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஜிஎஸ்எப் ஆர்வலர்கள் அஷ்டோட் துறைமுகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்: நாடிர் அல்-நூரி

image

இஸ்ரேலியப் படைகளால் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஜிஎஸ்எப் ஆர்வலர்கள் அஷ்டோட் துறைமுகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்: நாடிர் அல்-நூரி

சிப்பாங் -

இஸ்ரேலியப் படைகளால் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஜிஎஸ்எப் ஆர்வலர்கள்  அஷ்டோட் துறைமுகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

சுமுத் நூசாந்தராவை  வழிநடத்தும் சிந்தா காசா மலேசியாவின் தலைமை நிர்வாக அதிகாரி நாடிர் அல்-நூரி  இதனை உறுதிப்படுத்தினார்.

குளோபல் சுமுத் ஃப்ளோட்டிலா (ஜிஎஸ்எப்) மனிதாபிமானப் பணியில் பங்கேற்பாளர்கள் இஸ்ரேலியப் படைகளால் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

அவர்கள் அனைவரும் வியாழக்கிழமை இஸ்ரேலின் அஷ்டோட் துறைமுகத்திற்கு வரத் தொடங்கினர்.

தடுப்புக்காவலுக்குப் பிறகு சட்ட சேவைகளை வழங்க ஜிஎஸ்எப் வழக்கறிஞர்கள் தங்களைத் தொடர்பு கொள்ளத் தொடங்கியுள்ளனர்.

சுமுத்தின் பிடிபட்ட நமது ஹீரோக்கள்,ந்ஹீரோயின்கள் இஸ்ரேலிய துறைமுகமான ஆஷ்டோட்டை அடையத் தொடங்கியுள்ளனர். 

முடிந்தவரை சீக்கிரமாக, விரைவில் அவர்களின் முன்னேற்றத்தைப் பகிர்ந்து கொள்வோம். 

இதற்கிடையில் காசாவுக்கான உதவி நடவடிக்கையைத் தொடரும் என்று அவர்  தனது முகநூல் பக்கத்தில் ஒரு பதிவில் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

பகிர்
+ - reset