இஸ்ரேலில் உள்ள ஜிஎஸ்எப் தன்னார்வலர்களை மீட்க மலேசியா இராஜதந்திர முயற்சிகளை முடுக்கிவிட்டுள்ளது: பிரதமர்.
கோலாலம்பூர்:
இஸ்ரேலில் உள்ள ஜிஎஸ்எப் தன்னார்வலர்களை மீட்க
மலேசியா இராஜதந்திர முயற்சிகளை முடுக்கிவிட்டுள்ளது.
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இதனை கூறினார்.
காசாவிற்கு குளோபல் சவுத் ஃப்ளோட்டிலா மனிதாபிமானப் பணியில் மலேசியர்கள் பங்கேற்றனர்.
இதில் பல மலேசியர்கள் இஸ்ரேலியப் படைகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தடுத்து வைக்கப்பட்டுள்ள அவர்களை மீட்க மலேசிய அரசாங்கம் விரைவான நடவடிக்கைகளை மேற்கொண்டது.
குறிப்பாக நாட்டின் தன்னார்வலர்களை உடனடியாக விடுவிப்பதை உறுதி செய்வதற்கான இராஜதந்திர முயற்சிகளைத் திரட்டியது.
மக்களின் கஷ்டமான நிலை குறித்து அரசாங்க்ம கவலை கொண்டுள்ளது.
இதனால் தான் துருக்கி, எகிப்து மற்றும் சவுதி அரேபியாவைச் சேர்ந்த சகாக்கள் உட்பட உலகத் தலைவர்களுடன் உடனடியாகப் பேச்சுவார்த்தைகளை மலேசியா நடத்தியது.
அதே வேளையில் வாஷிங்டனின் உடனடி தலையீட்டைக் கோருவதற்காக, அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் மார்கோ ரூபியோவுடன் நேரடிப் பேச்சுவார்த்தை நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.
சுமுத் நூசாந்தரா மிஷனின் புரவலராக, மலேசியா அமைதியாக இருக்காது.
சர்வதேச ஆர்வலர்களை தடுத்து நிறுத்துவதிலும், மனிதாபிமான உதவி காசாவை அடைவதைத் தடுப்பதிலும் இஸ்ரேலின் நடவடிக்கைகள் உலகளாவிய மனிதாபிமான விழுமியங்களின் சரிவின் தெளிவான சான்றாகக் கருதப்படுகின்றன என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்

