இஸ்ரேலில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மலேசிய தன்னார்வலர்கள் பாதுகாப்பாக உள்ளனர்; மூன்றாவது நாடு வழியாக திருப்பி அனுப்பப்படுவார்கள்: விஸ்மா புத்ரா
புத்ராஜெயா:
இஸ்ரேலில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து ஜிஎஸ்எப் மலேசிய தன்னார்வலர்கள் பாதுகாப்பாக உள்ளனர்.
அவர்கள் மூன்றாவது நாடு வழியாக திருப்பி அனுப்பப்படுவார்கள் என விஸ்மா புத்ரா கூறியது.
காசாவுக்கான உதவிகளை கொண்டு சேர்க்கும் குளோபல் சுமுத் ஃப்ளோட்டிலா (ஜிஎஸ்எஃப்) பணியில் மலேசியர்கள் பங்கேற்றுள்ளனர்.
இதில் 15க்கும் மேற்ப்பட்ட தன்னார்வலர்கள் இஸ்ரேல் படையால் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
அந்த அனைத்து மலேசிய தன்னார்வலர்களும் பாதுகாப்பாகவும் நலமாகவும் உள்ளனர்.
அவர்கள் அனைவருக்கும் தூதரக ஆதரவு வழங்கப்பட்டு வருகிறது.
மேலும் அவர்கள் மலேசியாவிற்கு பாதுகாப்பாக திரும்புவதை உறுதி செய்வதற்கு பொருத்தமான உதவியும் வழங்கப்படுவதை உறுதி செய்வதாக விஸ்மா புத்ரா கூறியது.
- பார்த்திபன் நாகராஜன்

