images

பதவி விலகத் தயார்; பாஜகவுடன் ஒருபோதும் கூட்டு சேரமாட்டேன்: உமர் அப்துல்லா

image

பதவி விலகத் தயார்; பாஜகவுடன் ஒருபோதும் கூட்டு சேரமாட்டேன்: உமர் அப்துல்லா

புது டெல்லி: 

ஜம்மு  காஷ்மீர் மாநில அந்தஸ்துக்காக பதவி விலகத் தயார்; ஆனால், பாஜகவுடன் கூட்டு சேர மாட்டேன் என்று அந்த மாநில முதல்வரும் தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவருமான உமர் அப்துல்லா தெரிவித்தார்.

2019 ஆம் ஆண்டில் ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது. அங்கு 6 ஆண்டுகளாக  குடியரசுத் தலைவர் ஆட்சி நடைபெற்று வந்தது.

பின்னர் நடைபெற்ற தேர்தலில் தேசிய மாநாட்டுக் கட்சி - காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்று  முதல்வராக உமர் அப்துல்லா பதவியேற்றார். எனினும், ஜம்மு காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து வழங்க உமர் அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய உமர் அப்துல்லா, பாஜகவுடன் கூட்டணி அமைத்திருந்தால், மாநில அந்தஸ்து கிடைக்க வாய்ப்பு இருந்தது. ஆனால், மாநில அந்தஸ்துக்காக அரசியல் நிலைப்பாட்டில் சமரசம் செய்ய எனக்கு விருப்பமில்லை.

நான் பதவி விலகத் தயார். வேறெந்த எம்எல்ஏவையும் முதல்வராக்கி பாஜக கூட்டணி அரசை அமைத்துக் மாநில அந்தஸ்தை பெற்றுக் கொள்ளுங்கள் என்றார்.

- ஆர்யன்

பகிர்
+ - reset