டான்ஸ்ரீ மொஹைதின் பெர்சத்து கட்சியை மீண்டும் உயிர்ப்பிப்பார்: பைசல்
கோலாலம்பூர்:
முன்னாள் பிரதமர் டான்ஸ்ரீ மொஹைதின் யாசின் பெர்சத்து கட்சியை மீண்டும் உயிர்ப்பிப்பார்.
பெர்சத்து கட்சியின் உதவித் தலைவர் அஹ்மத் பைசல் அஸுமு கூறினார்.
பெர்சத்து கட்சியில் பல கொந்தளிப்புகள் நிலவி வருகின்றன.
இருந்தபோதிலும் மிகவும் அனுபவம் வாய்ந்த டான்ஸ்ரீ மொஹைதின் யாசினுடன் கட்சி மீண்டும் நாட்டை வழிநடத்த முடியும்.
தற்போதைய பிரச்சினைகள் குறித்து எதிர்மறையான கருத்துக்களை வழங்க அழைக்கப்பட்டதாக உணர்ந்தேன்.
ஆனால் ஆரம்பத்திலிருந்தே, கட்சி பல்வேறு வேதனையான, கடினமான சோதனைகளை எதிர்கொண்டதாக அவர் கூறினார்.
உதாரணமாக, பெர்சத்து தேசபக்தி உணர்வு, ஊழலுக்கு எதிரான போராட்டம், அதிகார துஷ்பிரயோகம், அரசியலமைப்பு இறையாண்மையைப் பாதுகாப்பதற்கான உறுதிப்பாடு ஆகியவற்றின் அடிப்படையில் நிறுவப்பட்டிருந்தாலும்,
அழுத்தம் அல்லது ஊழல் காரணமாக வழிதவறிச் சென்ற உறுப்பினர்கள் உள்ளனர் என்று அஹ்மத் பைசால் கூறினார்.
மிகவும் அனுபவம் வாய்ந்த டான்ஸ்ரீ மொஹைதின் யாசின் தலைமையில் பல்வேறு பெரிய முடிவுகளை எடுப்பதற்கு அவரது வயது ஒரு தடையாக இல்லை.
நாங்கள் எதிர்கொள்ளும் எந்தப் பிரச்சினைகளிலிருந்தும் மீண்டும் எழுவோம்.
நாங்கள் எப்போதும் மக்களுக்காக, போராடுவோம் என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்

