11 பீரங்கி குண்டுகள் முழக்கத்துடன் சிலாங்கூர் பட்டத்து இளவரசரின் திருமணம் விமரிசையாக நடைபெற்றது
கிள்ளான்:
சிலாங்கூர் பட்டத்து இளவரசர் தெங்கு அமீர் ஷா அவரது அஃப்சா ஃபாடினி அப்துல் அஜீஸ் ஆகியோர் இன்று விமரிசையாக நடைபெற்றது.
இங்குள்ள ஆலம் ஷா அரண்மனையில் உள்ள பள்ளிவாசலில் நடைபெற்ற விழாவில் அவர்கள் திருமணம் செய்து கொண்டனர்.
காலை 10.05 மணிக்கு 11 பீரங்கி குண்டுகள் முழங்கத்துடன் இத் திருமணம் உறுதிப்படுத்தப்பட்டது.
சிலாங்கூர் அரச திருமண விழாவில், கௌரவ துப்பாக்கிச் சூடுகளின் குறியீட்டு எண்ணிக்கை அரச தம்பதியினரின் திருமணம் வெற்றிகரமாக நிறைவடைந்ததைக் குறிக்கிறது.
சுங்கை பூலோ முகாமில் அமைந்துள்ள ராயல் பீரங்கி படைப்பிரிவின் (இஸ்தியாதத்) 41ஆவது பேட்டரியால் இஸ்தானா ஆலம் ஷா வளாகத்தில் இருந்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.
முன்னதாக சிலாங்கூர் சுல்தான் ஷராபுதீன் இட்ரிஸ் ஷாவும், சிலாங்கூர் தெங்கு பெர்மைசூரி நோராஷிகின் தெங்கு பெர்மைசூரியும் திருமண விழாவில் கலந்து கொண்டனர்.
- பார்த்திபன் நாகராஜன்

